கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்திற்கு பூட்டு (Photos)
திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்திற்குள் எவரும் செல்ல முடியாத நிலையில் பூட்டு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் மத வழிபாட்டுக்கு ஏன் தடை விதிப்பதாகவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருகோணமலை கன்னியா சிவன் கோயில் தொடர்பில் ஏற்கனவே திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில், மக்களின் வழிபாட்டிற்கு எவ்வித தடையும் நீதிமன்றம் விதிக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.
இதன்போது பொலிஸ்
நிலையத்திற்கும், கோயில் மூடப்பட்டமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும்
தொல்பொருள் அமைச்சினால் மூடுமாறு கூறப்பட்டதை அடுத்து தொல்பொருள் திணைக்கள
உத்தியோகத்தர்கள் மூடி தங்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் பொலிஸ்
பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
குறித்த சிவன் கோயில் மூடப்பட்டமை தொடர்பில் எதுவித ஆவணங்களும்
பொலிஸாருக்கு கிடைக்கவில்லை எனவும் நாளையதினம் தொல்பொருள் திணைக்களத்தினரிடம்
சிவன் கோயில் மூடப்பட்டமை தொடர்பிலான ஆவணங்களைப் பெற்றுத் தருவதாகவும் பொலிஸ்
பொறுப்பதிகாரி இதன்போது தெரிவித்ததாகத் திருகோணமலை தமிழர் சமூகத்தின் இணைப்பாளர்
ஆர்.நிக்லஸ் தெரிவித்துள்ளார்.




குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
