இரண்டு தனியார் பேருந்துகள் முந்திச்செல்ல முற்பட்டமையினால் நேர்ந்த விபரீதம் - சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
கண்டியிலிருந்து ஹட்டனுக்குச் சென்று கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள், கினிகத்ஹேன பகுதியில் ஒன்றையொன்று முந்திச்செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் இருந்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்றும், இரண்டு பேருந்துகளும் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அதிவேகமாக கவனக்குறைவாக வாகனங்களை செலுத்திய இரண்டு தனியார் பேருந்துகளின் சாரதிகள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.
மத்திய மலை நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அந்த வீதிகளில் செல்லும் வாகன சாரதிகள கவனமாகவும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பேருந்துகளை கவனக்குறைவாகவும் பொறுப்பற்ற முறையிலும் செலுத்தியதால், சாரதிகள் மீது நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கினிகத்ஹேன பொலிஸ் தெரிவித்துள்ளது.