புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக காஞ்சன
புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் தேசியப்பட்டியல் உறுப்பினராக முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை(kanchana wijesekera) நியமிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த பொது தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதில் ஒருவராக ரவி கருணாநாயக்கவின் பெயரை அந்த முன்னணியின் செயலாளர் திருமதி ஷியாமளா பெரேரா தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.
தேசியப்பட்டியல் ஆசனம்
இந்நிலையில், அடுத்த தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக காஞ்சன விஜேசேகரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இளைஞர் பிரதிநிதித்துவம் தேவை என புதிய ஜனநாயக முன்னணியின் பல தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு காஞ்சன விஜேசேகரவின் பெயரை தேசியப் பதவிக்கு முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல நடிகைக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் நடக்கவிருந்த திருமணம்.. யார் அந்த நடிகை தெரியுமா? Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri