திருமணத்திற்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த விபரீதம்
களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கி பயணித்த வான் கல்பத்த பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி கால்வாயில் விழுந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிச்சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் மகள் காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
பொக்குனுவிட்ட, வெலிகல பகுதியை சேர்ந்த கே.பி. கருணாசேன என்ற 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
களுத்துறை வடக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலக்கவின் பணிப்புரையின் பிரகாரம் போக்குவரத்து பிரிவு நிலைய கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷ குமார தலைமையில் சார்ஜன்ட்களான வருண்வன சேனவிரத்ன (69058), லக்மால் (72157) ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
