எங்களது ஜனநாயக ரீதியான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்: கலையரசன் எம்.பி

Kalaiyarasan Ampara Mullivaikal Remembrance Day Tamil National Alliance
By Kumar May 17, 2022 02:56 AM GMT
Report

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல யுத்திகளைக் கையாண்டனவே தவிர எந்த அரசியல் தலைவர்களிடமும் நல்ல நோக்கம் இருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டின் வடக்கு, கிழக்கு தாயகத்தில் மட்டுமல்லாது உலகத்திலே பல நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரிலே கல்முனை மாநகரசபை உறுப்பினர்களால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

எங்களது ஜனநாயக ரீதியான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்: கலையரசன் எம்.பி | Kalaiyarasan Speech At Mullivaykal

இந்த நாட்டில் ஒரு நிலையான சமாதானம் ஏற்பட வேண்டும். இங்கு வாழுகின்ற தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, நியாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும் எனற அடிப்படையில் தமிழ் மக்கள் போராடியிருந்தார்கள்.

அந்தப் போராட்டம் ஜனநாயக ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் 2009க்கு முற்பட்ட காலத்தில இருந்தது.

இதில் கவனம் செலுத்தாத இந்த அரசாங்கம் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல யுத்திகளைக் கையாண்டு இலட்சக்கணக்கான மக்களை ஒரு இடத்திலே கொத்துக் கொத்தாக அழித்த நாளாக இன்றைய நாளை நாங்கள் அனுஷ்டித்துக் கொண்டு வருகின்றோம்.

இந்த நாட்டிலே தமிழினத்திற்கு ஏற்பட்ட இந்த அவலநிலை இந்த நாட்டில் வாழுகின்ற எந்த இனத்திற்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், இந்த இலங்கையிலே வாழுகின்ற தமிழ் மக்கள் தங்களது கலாச்சாரத்தை, இருப்பை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவும் போராடியவர்கள்.

ஆனால் இந்த நாட்டை ஆண்டுவந்த எந்த அரசியல் தலைவர்களிடமும் ஒரு நல்ல நோக்கம் இருக்கவில்லை. அன்று முள்ளிவாய்க்காலிலே படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கப் பெறவில்லை.

சர்வதேச ரீதியாக வழங்கப்படுகின்ற ஆலோசனைகளைக் கூட ஏற்று இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை உலக நாடுகளும் அறிந்து கொண்டுள்ளன.

எங்களது ஜனநாயக ரீதியான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்: கலையரசன் எம்.பி | Kalaiyarasan Speech At Mullivaykal

அந்த வகையிலே இந்த நாட்டிலே வாழுகின்ற பூர்வீக இனம் தொடர்ச்சியாக இவ்வாறான அடக்கு முறைக்கு ஆளாகக் கூடாது என்ற அடிப்படையில் எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக எமது மண்ணிலே ஏற்பட்ட அவலங்களை நினைவுகூர்ந்து இவ்வாறான நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

நிச்சயமாக தமிழர்களுக்கு ஒரு நிலையான சமாதானம் கிடைக்கப் பெற வேண்டும் என்ற எங்களது ஜனநாயக ரீதியான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த அடிப்படையில், இப்போது வாழுகின்ற எமது இளைய சமூகம் எமது மண்ணிலே எமது இனம் வாழ்வதற்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

அவ்வாறு வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்திலே தமிழர்கள் மட்டுமல்லாது ஏனைய இனங்களும் இணைந்து சமத்துவமான ஒரு அரசியற் கட்டமைப்பினை உருவாக்குவதற்கு முன்நின்று உழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US