தமிழர்களும் நாட்டின் சம பிரஜைகள் என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை: சிறிரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு

Jaffna Anura Kumara Dissanayaka Janatha Vimukthi Peramuna Northern Province of Sri Lanka
By Theepan Apr 05, 2024 09:32 AM GMT
Report

இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்துகின்றது என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் இன்றையதினம் (05.04.2024) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

முல்லைத்தீவில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

அரசியல் உரிமைப் பிரச்சினை

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது அரசியலமைப்பு அதிகாரத்தையே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக தர தயாரில்லை என்பதையும் அரசியல் உரிமைப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையும் அவர்கள் நிராகரித்திருப்பதையே அவருடைய பேச்சு மிகத் துல்லியமாக காட்டுகின்றது.

தமிழர்களும் நாட்டின் சம பிரஜைகள் என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை: சிறிரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு | Jvp Does Not Accept Tamils Equal Citizens Country

வடக்க கிழக்கு மக்களின் பிரச்சினை என்பது வெறும் பொருளாதாரம், அபிவிருத்தி மட்டுமல்ல. அவர்களுக்கு அரசியல் உரிமைப் பிரச்சினையே மிகவும் பிரதானமானது என்பதையும் ஜே.வி.பி அறியாதது அல்ல.

இலங்கை வரலாற்றில் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கான உரிமைப் பிரச்சினை உண்டென்பதை எடுத்தக்காட்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் யாழ்ப்பாணம் வந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸநாயக்க (Anura Kumara Dissanayaka)13 ஐ தருகின்றோம், 13 பிளஸ் தருகின்றோம் சமஸ்டி தருகின்றோம் என்று கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை என திமிராகப் பேசிச் சென்றிருக்கின்றார்.

தமிழ் வாக்கு வங்கி

அத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை சற்றும் புரிந்தவராக வெளிப்படுத்தியிருக்க வில்லை. இதன்மூலம் இப்போது தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே ஒரு குறைந்தளவு அதிகாரமுள்ள 13 ஆவது அரசியலமைப்பை கூட ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் தெளிவாக புலப்படுகின்றது.

இந்நிலையில் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ஜே.வி.பியினர் கூறுவது ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் வாக்கு வங்கியை இலக்குவைத்தே என்பது புலனாகின்றது.

தமிழர்களும் நாட்டின் சம பிரஜைகள் என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை: சிறிரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு | Jvp Does Not Accept Tamils Equal Citizens Country

இதேநேரம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க, வடக்கு கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ அங்கு பேசியிருக்கவில்லை.

அதேபோன்று குடாநாட்டுக்கு வந்திருந்தபோதும் கூட வடக்கு கடற்றொழிலாளர்களுடைய பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. மாறாக எடுத்ததற்கெல்லாம் இந்திய எதிர்ப்பு பேசிவந்த ஜே.வி.பி தற்போது அதிலிருந்து விலகி மௌனம் சாதித்துவருவதும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

இந்திய பருப்பை உண்ண மாடம்டோம், இந்தியாவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட பேருந்துகளில் ஏறமாட்டோம், தீவுப் பிரதேசங்கள் இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படுகின்றது என் விமர்சனங்களை கடுமையாக முன்வைத்தனர்.

சுமந்திரனால் இழுத்தடிப்பு செய்யப்படும் தமிழரசுக் கட்சி விவகாரம்: கே. வி தவராசா குற்றச்சாட்டு

சுமந்திரனால் இழுத்தடிப்பு செய்யப்படும் தமிழரசுக் கட்சி விவகாரம்: கே. வி தவராசா குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தல்

ஆனால் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவ்விடயத்தில் அமைதிகாத்து வருகின்றனர்.

அதேபோன்று கச்சத்தீவு (Kachchatheevu) விவகாரத்திலும் அது இலங்கைக்கே சொந்தம் என நாம் வெளிப்படுத்தியிருந்த போதும் ஜே.வி.பி அது தொடர்பாக எவ்வித கருத்தையும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரனுக்கு இரண்டு தெரிவுகளே உண்டு: விமர்சனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல்

சுமந்திரனுக்கு இரண்டு தெரிவுகளே உண்டு: விமர்சனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல்

சஜித் தரப்புடன் கைகோர்த்த மொட்டு உறுப்பினர்கள்: உதயமானது புதிய கூட்டணி

சஜித் தரப்புடன் கைகோர்த்த மொட்டு உறுப்பினர்கள்: உதயமானது புதிய கூட்டணி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US