வரிச்சுமையோடு மக்களுக்கு மற்றுமொரு சுமை: விஜித ஹேரத்
அமைச்சரவை நாட்டுக்கு சுமை
அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என அரசாங்கம் கூறுகின்ற போதும் தற்போதுள்ள அமைச்சரவையே நாட்டுக்கு சுமை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், பொருளாதாரம் இந்தளவிற்கு வீழ்ச்சியடைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர்கள் மக்களுக்கு சுமை..!
அத்துடன் போராட்ட களத்திற்கு தடிகளை தூக்கிக்கொண்டு சென்றவர்களுக்கு தற்போது இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசியவர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. சீன உரக்கப்பலை நாட்டுக்கு கொண்டு வந்து இந்நாட்டு மக்களுக்கு 2400 கோடி நட்டத்தை ஏற்படுத்தியவர்களுக்கு இன்று இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையுடன் தற்போது நியமித்துள்ள இராஜாங்க அமைச்சர்களின் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.