என்பிபி ஆட்சியை கைப்பற்ற பிரதான சூத்திரதாரியான முன்னாள் தூதுவர்!
நாட்டின் மூன்று சதவீதம் அரசியல் சக்தியாக திகழ்ந்த தேசிய மக்கள் சக்தியை 2024 ஆம் ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டத்தின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் தூதுவர் ஜூலி சங் செயற்பட்டதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மம்பில அறிவித்துள்ளார்.
பிவித்துரு எல உருமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்,
மறுமலர்ச்சியின் சகாப்தத்தை ஏற்படுத்தும் நன் நோக்கத்துடன், நம் நாட்டு மக்கள் அமெரிக்க கைப்பொம்மையான அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்தனர்.
சீனாவின் உறவை பிரித்த ஜூலி சங்க
60 ஆண்டுகளாக சீனாவின் நிழலில் வளர்ந்த தேசிய மக்கள் சக்தியை மேற்கத்திய பக்கம் மாற்றியதே ஜூலியின் மிகப்பெரிய சாதனையாகும். திசைகாட்டி வெற்றிக்குப் பிறகு, ஜூலியின் எக்ஸ் செய்திகள் மறைந்துவிட்டன.
முந்தைய அரசாங்கங்களின் போது, சாலையில் மண் மேடு சரிந்தாலும் சரி, மயில் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்தாலும் சரி, அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டி சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பும் ஜூலி, கடந்த 14 மாதங்களாக குற்றச்சாட்டுகளுடன் செய்திகளை எழுதுவதை மறந்துவிட்டார்.

இந்த அரசாங்கத்தில் ஜூலி ஊழல், மோசடி அல்லது அட்டூழியங்களையும் பார்த்ததில்லை. இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அறிக்கை கூட வெளியிட்டிருந்தால், அது ஜூலி vs. ஜூலி அறிக்கையாக இருந்திருக்கலாம்.
அடுத்த தூதர் எரிக் மேயர் பௌத்த மதத்தைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளார். ஜூலி சங்கின் கைப்பொம்மையாக செயற்பட்ட ஜனாதிபதி, எரிக்கின் கைப்பொம்மையாக செற்படாமல் இப்போது தனது சொந்தக் காலில் நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.