செம்மணியில் 500க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை வெளியேற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்த இளஞ்செழியன்!
செம்மணி மனித புதைகுழி விவகாரம் நாளுக்கு நாள் வலுப்பெற்றிருக்கின்ற நிலையில் அண்மையில் கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளியான இராணுவ அதிகாரி சோமரத்ன ராஜபக்சவின் மனைவியினுடைய கடிதத்தின் பின்னர் பல விடயங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
குறிப்பாக அக்காலப்பகுதியில் செம்மணி புதைகுழி அடையாளம் காட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் சோமரத்ன ராஜபக்ச ஒரு கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது செம்மணிப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினர் உள்ளனர். எனவே அவர்கள் முன்னிலையில் பிரசன்னமாகி அடையாளம் காட்ட முடியாது என கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் நீதிபதி இளஞ்செழியன் அங்கிருந்த 500இற்கு மேற்பட்ட இராணுவ வீரர்களை வெளியேற்றி அதற்கு நிகரான பொலிஸ் அதிகாரிகளை பணிக்கு அமர்த்தியுள்ளார்.
மேலும் அகழ்வின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் சர்வதேச நிபுணர்களின் மத்தியில் காட்டப்பட்டதாக அன்றைய நீதிமன்ற கோப்புக்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இது தொடர்பில் மேலதிக விடயங்களை வெளிப்படுத்தி வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




