ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு கதவடைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் மொனராகலையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஊடகவியாலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று(13.08.2025) மொனராகலை நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமை தாங்கினார்.
ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டப்.எச்.எம். தர்மசேன, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருருந்தனர்.

கட்சியின் மொனராகலை மாவட்ட செயற்குழுவின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு, கலந்துரையாடலின் போது செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது கட்சியின் உள்ளக விவகாரம் என்று கூறி ஊடகவியலாளர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam