ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை: வழக்கு அறிக்கை திருகோணமலையில் வெளியீடு
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் ம.நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை நேற்று (12) மாலை திருகோணமலை வெளிக்கடை தியாகிகள் திறந்த வெளி அரங்குக்கு முன்னால் வடகிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து உணர்வு பூர்வமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு நினைவு கூரப்பட்டு ஊடகப் படுகொலை தொடர்பாகவும் நிமலராஜனின் படுகொலை தொடர்பாகவும் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.
அறிக்கை புத்தகம்
திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் குறித்த படுகொலை செய்யப்பட்ட ஊடகரின் வழக்கு தொடர்பிலான அறிக்கை அடங்கிய புத்தகம் விநியோகிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிப்பொறி முறை ஊடாக நீதியை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றாகவே ஊடகவியலாளர்களின் கொலை கருதப்படுகிறது எனவும் இதில் கலந்து கொண்ட சிவிற் சமூக செயற்பாட்டாளர்கள் இதன் போது தெரிவித்தனர்.
இதில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
