ஜோர்தானில் பணிப்பெண்ணாக சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்
தந்தை ஒருவர் தனது 14 வயது மகளை ஜோர்தானுக்கு பணிப்பெண் வேலைக்கு அனுப்பி குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய பணிக்குழுவின் உறுப்பினர் பாதுகாப்பு அமைச்சின் சட்ட அதிகாரி சட்டத்தரணி மேஜர் சதுன் இதனை குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் பெயர் விபரங்களை தெரிவிக்க மறுத்துள்ளார்.
பிள்ளையின் பெற்றோர்கள் விவாகரத்து பெற்ற நிலையில் பிள்ளை தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார்.
காலப்போக்கில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூக மாற்றங்களை எதிர்கொண்டு, பாதிக்கப்பட்ட பிள்ளை பாடசாலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.
இதன் பின்னர், அவரது தந்தை, ஆட்கடத்தல்காரருடன் சேர்ந்து, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக ஜோர்தானுக்குச் செல்லுமாறு குழந்தையை வற்புறுத்தினார். மேலும் குழந்தை எவ்வித உதவிகளும் அற்ற நிலையில் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
தந்தையூடாக பாட்டி மற்றும் தாத்தாவை ஏமாற்றிய கடத்தல் காரர்கள் குழந்தையை தனது சொந்தக் குழந்தையாகப் பராமரிப்பதாக உறுதியளித்து வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.
கடத்தல் காரர்கள்
குழந்தையிடம் பிறப்புச் சான்றிதழ் கூட இல்லாத போதிலும், ஒரே நாளில் கொழும்புக்கு கூட்டி வந்து கடவுச்சீட்டு மற்றும் விசாவையும் ஏற்பாடு செய்துள்ளனர். வீட்டு வேலைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதாக குழந்தைக்குச் சொல்லப்படவில்லை.
கடத்தல் காரர்கள் விமான நிலையத்தில் குடியகல்வு அதிகாரிகளிடம் எப்படி பொய் சொல்வது என கற்றுக் கொடுத்தனர். விமான நிலையத்தில் கடைசி நிமிடத்தில் குழந்தைக்கு கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டன.
விமான நிலையத்தில் கடைசி நிமிடத்தில் தான் வீட்டு வேலை செய்ய வேண்டும் நாசுக்காக கூறுகின்றனர். குழந்தை கண்ணீர் வடித்தவாறு எனக்கு வீட்டு வேலை செய்ய முடியாது.என்னால் வெளிநாட்டுக்கு போக முடியாது என கதறியுள்ளது.
இதற்காக செலவு செய்த பணத்தை செல்லமுடியாவிட்டால் மீளளிக்குமாறு 14 வயது குழந்தையிடம் ஈவிரக்கமற்ற கடத்தல் காரர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். அவற்றைச் செலுத்த பணம் இல்லாததால், குழந்தை மனவலியுடம் வெளிநாடு சென்றுள்ளார்.
ஜோர்தானில் பணிப்பெண்
ஜோர்தானில் , 14 வயது குழந்தை வீட்டில் உள்ள அனைத்தையும் சுத்தம் செய்வது, கழிப்பறைகளை கழுவுவது போன்ற பல வேலைகளை செய்ய வேண்டி ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்தக் குழந்தை கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கும் ஆளாகியுள்ளது.
முதலாளியும் வீட்டுப் பெண்ணும் குழந்தையை கொடூரமாக அடித்ததாகவும்,பின்னர் ஜோர்தானில் இருந்த வேலைவாய்ப்பு முகவரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கொடூரமாக தாக்கப்பட்டதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்,குழந்தைக்கு மூன்று இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.





கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்... யார் பாருங்க Cineulagam
