ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
சதோச வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
மூன்றாவது இணைப்பு
நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இரண்டாவது இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று காலை குற்ற புலனாய்வு பிரிவில் சரண் அடைந்துள்ளார்.
சதொச ஊழல் மோசடி விவகாரத்தில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தார்.
விசாரணைப் பிரிவில் முன்னிலை
பல குழுக்கள் அடங்கிய பொலிஸார் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவராக முன்வந்து சரண் அடைந்துள்ளார்.

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமையவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.