வெளிநாடு சென்று அங்கிருக்கும் பணத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் மறந்துள்ள விடயம்! வழங்கப்படும் அறிவுறுத்தல்
கலாச்சார பண்பாட்டை கலைகளின் ஊடாக தான் வளர்க்க முடியும் என்பதை மறந்து விட்டோம் சவ்சிறிபாய டவர் மண்டப அரங்கத்தின் தமிழ் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஜெயப்பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண, மட்டக்களப்பு, மலையக பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்று அங்கிருக்கும் பணத்தில் வாழ்கின்றவர்களாக இருக்கிறார்கள்.
இலங்கையே இப்போது அவர்களால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. இதனால் கல்வியை முன்னேற்ற வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் போகிறது. தமிழ் சமூகம் கல்விக்கான சமூகம்.
இலங்கைத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக வாழ்ந்ததே கல்வியால் தான். ஆனாம் நாம் என்ன செய்கிறோம், வெளிநாட்டிற்கு சென்று உழைத்து அதனால் தான் நாம் எம்முடைய வருமானத்தை வளர்க்கலாம் என நினைப்போம்.
எனினும் கலாச்சார பண்பாட்டை கலைகளின் ஊடாக தான் வளர்க்க முடியும் என்பதை மறந்து விட்டோம் என அறிவுறுத்தியுள்ளார்.
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan