மலர்ந்துள்ள புத்தாண்டானது மாற்றங்களை தரும் ஆண்டாக அமையட்டும்: அமைச்சர் ஜீவன் தொண்டமான்
மலர்ந்துள்ள புத்தாண்டானது மாற்றங்களை தரும் ஆண்டாகவும், அதன்மூலம் நாடும் நாட்டு மக்களும் வளம்பெறும் ஆண்டாகவும் அமையட்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, " 2022 ஆம் ஆண்டானது இலங்கைக்கும், இலங்கைவாழ் மக்களுக்கும் வலிகள் தந்த ஆண்டாகவே அமைந்தது.
அரசியல் ஸ்தீரமற்ற நிலை
வரிசை யுகம், பொருளாதார நெருக்கடி என பிரச்சினைகளைப் பட்டியலிடலாம். நாட்டில் அரசியல் ஸ்தீரமற்ற நிலையும் ஏற்பட்டது.
எனவே, நாட்டில் வரிசை யுகத்துக்கு முடிவுகட்டி, அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தி, வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதே எமது பிரதான இலக்காக இருந்தது.
அதற்கான ஏற்பாடுகளை 2023 இல் செய்ய முடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. வரிசைகள் இன்றி புத்தாண்டை வரவேற்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஒன்றிணைந்து பயணிப்போம்
அதேபோல நாம் இன்னும் பிரச்சினைகளில் இருந்து முழுமையாக மீளவில்லை. அவ்வாறு மீள்வதாக இருந்தால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மலர்ந்துள்ள புத்தாண்டிலாவது ஒன்றிணைந்து பயணிப்போம். நாட்டை மீட்க கரம் கோர்ப்போம்.
மலர்ந்துள்ள புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
