6 லட்ச ரூபாய் நீர் கட்டணம் செலுத்தாத ஜீவன் தொண்டமான்
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வீட்டுக்கான நீர் கட்டணம் பெருந்தொகை நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவரையான காலப்பகுதிக்கான நீர் பட்டியலுக்கான கட்டணம் 6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் நிலுவையாக உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் மத்திய மாகாண நிவாரண சேவை நிலையத்தினை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதேவேளை, கொரோனா தொற்று காலப்பகுதியில் இருந்து இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் வரை 341 மில்லியன் ரூபாய் நீர் கட்டணம் மக்கள் செலுத்தவில்லை. இதனால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நீர் பட்டியலை விரைவான செலுத்துமாறு உரிய பிரிவுகள் மற்றும் நபர்களிடம் அறிவித்த போதும் அதனை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri