புதிய பிரதமருக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து (Photo)
இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
''எவ்வாறாயினும், தாமதமின்றி தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளைச் சமாளித்து எங்கள் தேசத்தை ஸ்திரப்படுத்துவதற்கான உங்கள் முயற்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை தருமென நான் உறுதியளிக்கிறேன்'' என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
I wish @RW_UNP the best on becoming the PM.
— Jeevan Thondaman (@JeevanThondaman) May 12, 2022
However, there are many issues that need to be addressed without delay and I assure the fullest cooperation of the Ceylon Workers' Congress in your effort to overcome those issues and stabilise our nation.