பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர்! ஜயந்த சமரவீரவால் தாக்கப்பட்டதாக வாக்குமூலம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தம்மை தாக்கியதாக நபரொருவர் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்ய வந்த நபர் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த நபர் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பாணந்துறை திக்கல பிரதேசத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைப்பாளரான இவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தம்மை தாக்கியதாக முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவிடம் கேட்டபோது, அவ்வாறான தாக்குதல்களில் தாம் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நபர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத்ன சமரவீரவை தாக்க முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினரின் பிரதான மெய்ப்பாதுகாவலரும் முறைப்பாடு செய்துள்ளார்.

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
