கிளிநொச்சி - பிரமந்தனாறு விவசாய பண்ணைக்கு ஜப்பானிய தூதுவர் உத்தியோபூர்வ விஜயம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு விவசாய பண்ணையினை ஜப்பானிய தூதரகத்தின் இரண்டாம் நிலை உத்தியோகத்தர் தகுடோ யமசாகி உத்தியோபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பார்வையிட்டிருந்தார்.
இந்த விஜயமானது இன்றைய தினம்(01.07.2026) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிரமந்தனாறு நவீன விவசாய பண்ணை
இதன் போது, கண்டாவளை - பிரமந்தனாறு நவீன விவசாய பண்ணையில் பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள பயிர் செய்கையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் குறித்த பகுதியிலுள்ள 25 விவசாயிகளுக்கு 14 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளீடுகள் மற்றும் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் ஜப்பானிய தூதரகத்தின் தகுடோ யமசாகி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், திட்டமிடல் உத்தியோகத்தர், கிராம சேவையாளர் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர்.


வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri