நான்கு நாள் வேலை வாரம்: பணியாளர் வெற்றிடங்களை நிவர்த்திக்க முயற்சிக்கும் ஜப்பான்
மிகவும் கடினமாக உழைக்கும் நாடான ஜப்பான், அதன் மக்களும் நிறுவனங்களும் நான்கு நாள் வேலை வாரங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் பணியாளர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய மொழியில், ஒருவர் இறக்கும் வரை உழைக்கும் ஒரு சொல்லும் அடங்கியுள்ளது.
எனினும் தற்போது 74 மில்லியன்களாக இருக்கும் ஜப்பானின் தொழிற்படை, 2065இல் 40வீதத்தால் குறைந்து 45 மில்லியன்களாக இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் விடுமுறை
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நான் நாள் வேலை நாள் யோசனையை ஆமோதித்த பின்னர், ஜப்பானிய அரசாங்கம் 2021 இல் குறுகிய வேலை வாரத்திற்கு முதலில் ஆதரவை தெரிவித்தது.
எனினும், ஜப்பானில் உள்ள சுமார் 8 வீதமான நிறுவனங்கள், தமது ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதிக்கின்றன.
அதே நேரத்தில் 7 வீதமான நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமாக ஒரு நாள் விடுமுறையை வழங்குகின்றன என்று சுகாதார, தொழிலாளர் மற்றும் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் உள்ள ஒரு இலத்திரனியல் நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்களில் பணியாற்றும் 63ஆயிரம் பணியாளர்களில், 150 பேர் மாத்திரமே நான்கு நாள் அட்டவணையை தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
85 வீத தொழில் தருனர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என்பது, குழந்தைகளை வளர்ப்பவர்கள், வயதான உறவினர்களைப் பராமரிப்பவர்கள், ஓய்வூதியத்தில் வாழும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் நெகிழ்வுத்தன்மை அல்லது கூடுதல் வருமானம் தேடுவோரை ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில், ஜப்பானிய அரசாங்கத்தின் அண்மைய வெள்ளை அறிக்கை ஒன்றில், நாட்டில் கடின உழைப்புக் காரணமாக மாரடைப்பு உட்பட ஒரு வருடத்திற்கு குறைந்தது 54 இறப்புகள் ஏற்படுகின்றன என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
