ஜப்பான் ரயிலில் ”பெட்மேன்” நடத்திய தாக்குதல்: பலா் காயம்
ஜப்பானில் “பெட்மேன்” போன்று ஆடையணிந்த இளைஞா் ஒருவா் ரயில் பயணிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் 17 போ் காயமடைந்தனா்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 24 வயதான இந்த இளைஞா் நீண்ட கத்தி ஒன்றுடன் ரயிலில் சக பயணிகளை கத்தியால் குத்தியதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 3 போ் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனா். அதில், வயதான ஒருவா் சுயநினைவற்ற நிலையில் உள்ளதாக ஜப்பானிய செய்திகள் தொிவிக்கின்றன. சமூக தளங்களில் வெளியான காணொளிகளில் பயணிகள் ரயிலில் இருந்து பயத்தில் தப்பியோடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2019ஆம் ஆண்டிலும் ஜப்பானில் இளைஞா் ஒருவா் ரயில் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் இருவா் உயிாிழந்ததுடன் பலா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri