யாழ். பல்கலையில் விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள் (Photos)
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றாகும். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் அவரது உருவ படத்திற்கு முன்பாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
அதேவேளை மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைகழக சூழல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் இராணுவத்தினர் , பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் , புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |


முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
