யாழ். பல்கலையில் இடம்பெற்ற ஆடல் அரங்கம் நிகழ்வு
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகமானது யாழ். பல்கலைக்கழக நடனத்துறையுடன் இணைந்து பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வு அரங்கை முன்னிட்டு ஆடல் அரங்கம் நிகழ்வொன்றினை நடத்தியுள்ளது.
இந்நிகழ்வானது, யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று (22.03.2024) மாலை நடைபெற்றுள்ளது.
யாழ் நடனத்துறை மாணவர்கள்
இதன்போது, இந்தியாவின் பிரபல பரதநாட்டிய கலைஞர் கலைமாமணி முனைவர் எம். எஸ். சரளாவினது நெறியாள்கையில் அவரது மாணவி தேவியின் சிறப்பு பரத நாட்டிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மேலும், யாழ் பல்கலைகழக நடனத்துறை மாணவர்கள் இணைந்து வழங்கிய நடன நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
அது மாத்திரமன்றி, சப்பதிகார ஆடல், தில்லானா ஆகிய நடனங்கள் இடம்பெற்றுன்னதுடன் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, யாழ் இந்திய துணைத் தூதரக பதில் தூதர் ராம் மகேஷ், பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.