யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் பலர்
யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தினை தொடர்ந்து கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் தன்னுடைய பதவி விலகியுள்ளார்.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் யாழ்.பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளை தட்டிக் கேட்டமை, மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சீரிய முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக பேரவை ஒத்துழைப்பு வழங்காமை போன்ற காரணங்களால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் ரீதியில் அழுத்தங்கள்..
யாழ் பல்கலையில் சம காலத்தில் தமிழ் இனத்துக்கும் எதிர்காலத்துக்கும் நம்பிக்கைத்தரகூடிய ஒரு ஆளுமை பல்கலையின் பேரவையின் முடிவினால் அதிருப்தியடைந்து பதவி விலகியுள்ளமை அதிர்ச்சி அளிப்பதாக பல்கலைக்கழக மட்டத்திலிருந்தும் வெவ்வேறு தரப்பிலிருந்தும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் மேம்பாடு தொடர்பில் சிந்திக்கும் போராசிரியர் ரகுராம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமூகத்தில் இடம்பெறுகின்ற விடயங்கள் தொடர்பில் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் இவருக்கு அரசியல் ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் பலரிடம் இருக்கின்றது.
குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இதன் பின்ணியில் இருக்கலாமா என்ற சந்தேகம் பலரிடம் இருப்பதாக பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன.
காணொளி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |