யாழ். திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்
யாழ். வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக பௌர்ணமி தினமான இன்றையதினமும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பக தலைவர் தீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 21 மணி நேரம் முன்
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு News Lankasri
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri