போராட்டத்தில் இறங்கிய யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் - தீர்வை பெற்றுதருமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது, நேற்று(05.06.2026) ஆரம்பமாகிய நிலையில், இன்றும்(06.06.2026) தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றம் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர்கள் குறித்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நேர்முக தேர்விற்கு வந்தவர்களுடன் ஏற்பட்ட குழப்பம்
இதன்போது, நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களுக்கும், யாழ்ப்பாண வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேர்முகத் தேர்வுக்கு வந்த அதிகாரி ஒருவர், இன்றையதினம் பிரச்சனை நடப்பதால் வேறு ஒரு தினத்திற்கு நேர்முகத் தேர்வினை நடத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில், நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளனர்.
இருப்பினும், சுகாதார தொண்டர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மொட்டுக் கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா திஸ்ஸகுட்டியாராச்சி! அவருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புக்கள்...