யாழ். சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலய விவகாரம் தொடர்பில் மக்கள் கோரிக்கை
யாழ்ப்பாணம் - சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின், ஏழாம் திருவிழா தொடர்பில் உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (30.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
சுதுமலை - புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில், ஏழாம் திருவிழா பல ஆண்டுகளாக, சுதுமலை தெற்கு யுவசக்தி சனசமூக நிலையத்தின் எல்லைக்குட்பட்ட, பொது மக்களின் திருவிழாவாக காணப்பட்டது.
திருவிழாவுக்கான கட்டுப் பணம் மற்றும் திருவிழா சார்ந்த செலவுகளுக்கான பணம் ஆகியவை, பொது மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு, பல ஆண்டுகள் திருவிழா நடத்தப்பட்டது. அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக, திருவிழா கைவிடப்பட்டது.

ஆலய நிர்வாகம்
பின்னர் மீண்டும் வருடாந்த பெருந்திருவிழா நடைபெற்றவேளை, எமது ஊரைச் சேர்ந்த சிலர் தலைமை வகித்து, பொது மக்களின் திருவிழா என்ற அடிப்படையில் திருவிழாவை சில காலம் நடத்தி வந்தனர்.
பின்னர் தற்போது தனிப்பட்ட சில நபர்கள் பொறுப்பு நின்று, ஊரில் உள்ள சிலரிடம் பணம் சேகரித்து, திருவிழாவை, தம்முடையது என உரிமை கொண்டாடுகின்றனர்.
இதனை நாம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் மற்றும் ஆலய நிர்வாகத்துக்கும் பல வருடங்காக தெரியப்படுத்தி வருகின்றோம்.

வழக்குத் தாக்கல்
அதன் பின்னர், இது பொது மக்களின் திருவிழா என சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இருந்தாலும் குறித்த சில நபர்கள் இது தம்முடைய தனிப்பட்ட திருவிழாவென தற்போது வரைக்கும் விடாப்பிடியாக நிற்கின்றனர். அத்துடன் திருவிழா தொடர்பாக பொது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
ஆகவே இது பொது மக்களுக்கு உரியத் திருவிழா. அதனை எல்லோரும் சேர்ந்து நடத்த வேண்டும் என்பதே எமது விருப்பம் எனக் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri