தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களின் செயல் நியாயமற்றது: வர்ணகுலசிங்கம் காட்டம்
இந்தியாவின் கேரள கடற்றொழிலாளர்கள் தூத்துக்குடி பகுதியில் கடற்றொழிலுக்கு வருகின்றவேளை அவர்கள் பிடிக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போது எவ்வாறு தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு வர முடியும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (22.03.2024) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
விடுத்துள்ள கோரிக்கை
இதேவேளை பாண்டிச்சேரி முதலமைச்சர் குப்புச்சாமிக்கும் பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் வருவதை கட்டுப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் நடிகரும் மக்கள் நீதி மைய நிறுவனர் நடிகர் கமலஹாசன் கச்சதீவு தொடர்பில் தெரிவித்த கருத்திற்கும் அவர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |