இந்திய பிரதமருக்கு இலங்கை பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் கடிதம் அனுப்ப தயார்: சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமருக்கு நிச்சயமாக கடிதம் அனுப்பப்படும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி கடையடைப்பு அனுஸ்டிப்பது தொடர்பில் இன்றையதினம் (13.10.2023) யாழ்ப்பாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் தமிழ் கட்சிகள் இணைந்து கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தன.
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மகிந்த மரணிப்பதற்கு முன்னர் நீக்கப்பட வேண்டிய பெயர்கள் : பட்டியலிடும் தென்னிலங்கை அரசியல்வாதி(Video)
நிர்வாக முடக்கம்
மேலும் அவர் தெரிவிக்கையில், சிங்கள பௌத்த மக்கள் வாழாத தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் தொடர்ச்சியாக காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு புத்தர் கோயில்கள் நிறுவுகின்ற வேலைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்பதை கண்டித்தும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடுவில் நூற்றுக்கணக்கான வருடங்களாக கால்நடைகளுக்காக இருக்கக்கூடிய அந்த மேய்ச்சல் தரையை பலாக்காரமாக முன்னர் இருந்த ஆளுநர் அங்கு இருக்கின்றது.
ஒரு சில சிங்கள மக்களுக்கு கொடுத்து இப்பொழுது மயிலத்தமடுவில் மட்டக்களப்பில் இருக்கின்ற கால்நடைகளை கொண்டு சென்று பராமரிக்க முடியாத, மேச்சல் தரைக்கு விட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.
அதே சமயம் மட்டக்களப்பில் வேளாண்மை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் அந்த மேய்ச்சல் தரை என்பது உடனடியாக விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பில் வேளாண்மை ஆரம்பிக்கப்பட வேண்டுமாக இருந்தால் மேச்சல் தரை என்பது முழுமையாக விடுவிக்கப்பட்டு அந்தக் கால்நடைகள் அங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்கின்ற விடயங்களை வலியுறுத்தியும், இவற்றை இலங்கையில் இருக்கக்கூடிய ராஜதந்திர மட்டங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இலங்கையில் இவ்வாறான பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை உலக நாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கைக்கு உதவி செய்கின்ற நிறுவனங்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த அடிப்படையில் இந்த நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு எதிராக ராணுவம், பொலிஸ், பௌத்த பிக்குகள் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றார்கள் என்ற விடயத்தை சுட்டிக்காட்டி நாங்கள் வருகின்ற 20ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய நிலையில் கடையடைப்பை நடத்துவதற்கு முடிவுகள் எடுத்திருக்கின்றோம்.
அதற்கான துண்டு பிரசுரங்கள் அதற்கான செயற்பாட்டு வேலைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் இன்று முடிவுகள் எடுத்து இருக்கின்றோம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ச்சியாக இது பற்றி பேச இருக்கின்றோம்.
இறுதி முடிவு
இன்றைக்கு இங்கிருந்து தொலைபேசி மூலமாக நாங்கள் மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரருடனும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் இதுபற்றி தொலைபேசி மூலமாக கலந்து பேசி இருக்கின்றோம்.
அது மாத்திரமில்லாமல் இங்கிருக்கின்ற பலபேர் கிழக்கு மாகாணத்துக்கு சென்று அவர்களுக்கு ஒரு உற்சாக மூட்டுகின்ற வகையில் செயற்படுவதாகவும் நாங்கள் யோசித்து இருக்கின்றோம். நாங்கள் கடந்த ஒரு மாதமாக எல்லோருக்கும் தெரியும் நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தப்பட்டது.
அவர் நாட்டை விட்டு வெளியேறியது, இது வெறுமனே அவர் சம்பந்தமான விடயம் அல்ல நீதித்துறை என்பது எவ்வளவு தூரம் சிங்கள அரசாங்கத்தினாலும், அரசை இயந்திரங்களாலும் அவமதிக்கப்படுகிறது என்ற விடயங்கள் முக்கியமானது. ஆகவே அனைத்தையும் வெளிக்கொண்டுவரும் முகமாகத் தான் நாங்கள் கடையடைப்பு என்ற விடயத்தை இறுதி முடிவு செய்து இருக்கின்றோம்.
20 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவியதான அடிப்படையில் முஸ்லிம் மக்கள் எல்லோரும் இணைந்து கடையடைப்பை நாங்கள் முன்னெடுத்து செல்ல இருக்கின்றோம், அதற்கு ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கில் வாழுகின்ற சகல மக்களினதும் ஆதரவையும் நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
நாங்கள் முக்கியமாக எதிர்நோக்கி கொண்டிருக்கின்ற பிரச்சனைகள் வருமனே அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சாதாரணமாக நின்று பார்ப்பது போல தான் தெரிகிறது, ஆகவே இதனை மாற்றி அமைக்க வேண்டுமாக இருந்தால் ஒட்டு மொத்தமாக தமிழ் முஸ்லிம் மக்கள் இதனை வெளிப்படுத்தும் முகமாகத்தான் இந்த கடையடைப்பு.
பாரதப் பிரதமருக்கு நிச்சயமாக கடிதம் அனுப்பப்படும் அது மாத்திரம் அல்லாமல் இந்த நிகழ்வுகள் தொடர்பாக கொழும்பில் இருக்கக்கூடிய ராஜதந்திரர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படும் இந்த விடயங்கள் எல்லாம் நாங்கள் இறுதி செய்திருக்கின்றோம்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் கடையடைப்பு தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின்
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக்
கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்
கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய கட்சியின் தலைவர்
ஸ்ரீகாந்தா செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர்
வேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
