யாழ். பலாலி வீதியில் ஒளிர மறுக்கும் வீதி விளக்குகள்: நடவடிக்கை எடுக்குமா உரிய தரப்பு
யாழ்ப்பாணம்(Jaffna) - பலாலி வீதி, உரும்பிராய் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் மிக நீண்டகாலமாக ஒளிராததால் தாங்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது பொதுமக்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மின்சார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய இரண்டு அரச நிறுவனங்களுக்கும் உரித்தான சுமார் 20க்கும் அதிகமான வீதி விளக்குகள் குறித்த வீதியில் பொருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் மிக நீண்ட காலமாக அந்த வீதி விளக்குகள் ஒளிர்வதில்லை.
வீதி விளக்குகள் தேவை
சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களான வலி. கிழக்கு பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை மின்சார சபை ஆகியவற்றில் தடவைகள் நாங்கள் எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கியும் அவர்கள் அந்த வீதி விளக்குகள் ஒளிர்வதற்கான வேலைத்திட்டங்களை செய்யவில்லை.
உரும்பிராய் சந்தியில் அதிகளவான வர்த்தக நிலையங்கள் மற்றும் மதுபான நிலையம் காணப்படுவதால் அங்கு சனநெரிசல் காணப்படுகிறது.
அதனால் குறித்த பகுதியில் தொடர்ந்து வீதி விபத்துகள் இடம்பெறுகின்ற நிலைமை காணப்படுகிறது. ஆகையால் இந்த பகுதியில் அவசியமாக வீதி விளக்குகள் தேவை.” என்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
