யாழ். மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Jaffna Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Kajinthan Jun 27, 2023 10:18 AM GMT
Report

யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முறைகேடு இடம்பெற்றிருந்தால் தங்களுடைய மேன்முறையீடுகளை எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து நேற்றைய தினம் (26.06.2023) யாழ்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் அரச அதிபரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யாழ். மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Jaffna Need Not Be Confused

நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் அவர் கூறுகையில், குறித்த சமுர்த்தி தெரிவில் ஏதாவது முறைகேடு இடம் பெற்றிருந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் திகதி வரை தங்களுடைய மேன்முறையீடுகளை மாவட்ட சமுர்த்தி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

அந்த மேன்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவே இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை.

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்டமான சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சில பிரதேச செயலகங்கள் கூடிய மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்டக் கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில், இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குப்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US