யாழ். நெடுந்தீவை உலுக்கிய படுகொலை! 100 வயது மூதாட்டியும் பலி
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது,
100 வயது மூதாட்டியான பூரணம் இன்று (27.04.2023) மாலை உயிரிழந்துள்ளார்.
வெளியான மருத்துவ அறிக்கை
அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர்.
சந்தேகநபர் கைது
100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
குறித்த கொலைச் சம்பவத்தில் நகைகளுடன் தப்பித்த பிரதான சந்தேக நபர் புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கொலை சம்பவத்தின் போது, தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நாயும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 19 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
