யாழ். மாநகர தமிழ் காவல் படை விடயம் ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு! முடிவுகள் வெளியாகவில்லை

Jaffna
By Independent Writer Apr 10, 2021 11:20 AM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

தேசிய பாதுகாப்புச் சபை நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று அவசரமாகக் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாநகரைத் தூய்மைப்படுத்தும் வகையில் மாநகர சபையால் நியமிக்கப்பட்டுள்ள காவல் படை தொடர்பிலும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்தும் விசேடமாக ஆராயப்பட்டது.

இதன்போது தேசிய பாதுகாப்புக் கருதி சில முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும், அவை விரைவில் வெளியாகும் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையால் மாநகரின் சுகாதார நடைமுறைகளைக் கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையைக் கண்காணித்தல் மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட காவல் படையின் சீரூடை விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைப் பகுதிகளுக்குள் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடையைப் போன்ற வர்ணத்தால் வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி சீருடைகள் தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளர், பிரதம வருமான வரிப் பரிசோதகர் மற்றும் குறித்த காவல் படையில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மாநகர சபை ஊழியர்கள், ஐவர் உட்பட்ட 7பேரிடம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர் விசாரணை நடைபெற்றது.

இதன்போது யாழ். மாநகர மேயரும் நேற்றிரவு விசாரணைக்காக யாழ்.பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தார். கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்புக்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டதெனச் சொல்லப்பட்டது.

இந்நிலையிலேயே இன்று பிற்பகல் அவசரமாகக் கூடிய தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யாழ். மாநகர சபை விவகாரம் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டுள்ளது.  

13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US