யாழ். போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று நீக்கப்பட்டதாக அறிவிப்பு

Jaffna Hospitals in Sri Lanka
By Kajinthan Feb 22, 2023 11:28 AM GMT
Report

யாழ். போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று அடையாளம் காணப்பட்டு தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது, எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லையென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

தொழிநுட்ப வேலைகளின் தடங்கல் நிலை

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து மலசலக்கழிவு மற்றும் ஏனைய கழிவு நீரானது சுத்திகரிக்கப்பட்டு பண்ணைக் கடலினுள் செலுத்தப்படுகின்றது. இது கடந்த 20 வருடமாக நடைபெற்று வருகின்ற ஒரு செயல்முறையாகும்.

யாழ். போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று நீக்கப்பட்டதாக அறிவிப்பு | Jaffna Hospital Water Issue

ஆனால் தொழிநுட்ப வேலைகளில் ஏற்பட்ட தடங்கல் நிலை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இந்த வேலைகளில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன.

குறிப்பாக பண்ணை பகுதியில் இந்த நீரை அனுப்பும் இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் மூலமாக தெரியப்படுத்தப்பட்டு அந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து இருந்தோம்.

இதன் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் வெளியேறாமல் தடுக்கப்பட்டன. இதன் காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் வெளியேற்றப்பட வேண்டிய கழிவு நீரின் அளவு அதிகரித்திருந்தது.

வைத்தியசாலையில் உணவு தேவைக்கு மற்றும் ஏனைய தேவைகளுக்கு இரண்டு வகையான நீரை பயன்படுத்துகின்றோம்.

கழிவுநீர் வெளியேற்றம்

யாழ். போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று நீக்கப்பட்டதாக அறிவிப்பு | Jaffna Hospital Water Issue

வைத்தியசாலையில் மூன்று கிணறுகளில் இருந்து இறைக்கப்படும் நீர் வைத்தியசாலை பொது தேவைக்கு பயன்படுத்தப்படும். குறிப்பாக நீருக்கு கட்டாயமாக குளோரின் இட்டு அதனை பாவித்து வந்தோம்.

ஆனால் இந்த கழிவுநீர் வெளியேற்றம் திருத்த வேலைகள் காரணமாக தடைப்பட்டிருந்த போது சடுதியாக நில மட்டத்தில் கழிவுநீரின் தன்மை அதிகரித்ததினால் கிணற்றில் அதிகளவு கழிவுநீர் உள்ள கிருமிகள் சென்றதன் வெளிப்பாடாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் சத்திர சிகிச்சை கூட உத்தியோகத்தர்கள் விடுதியில் கடமையாற்றுகிறவர்கள் வயிற்றோட்ட நோயால் பாதிக்கப்பட்டார்கள்.

இது எமக்கு உடனடியாக தெரியவந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உடனடியாகவே அந்த கிணற்று நீரினை பரிசோதனைக்காக அனுப்பினோம்.

அதுபோல மேலதிக குளோரின் இட்டு கிருமி தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்போது ஆய்வு கூடத்தில் ஒருவகை பக்டீரியா காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று நீக்கப்பட்டதாக அறிவிப்பு | Jaffna Hospital Water Issue

கிருமித் தொற்று நிலமை 

மிகையான குளோரின் ஊட்டத்தின் மூலம் இந்த கிருமிகள் அழிக்கப்பட்டன.  தற்போது கிருமித் தொற்று நிலமை சுமுகமாக உள்ளது.

இது ஒரு தற்காலிகமாக ஒரு ஏற்பட்ட பிரச்சனையே தவிர திட்டமிடப்பட்ட விடயம் அல்ல இந்த விடயங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நீர் தொற்றின் காரணமாக மருத்துவ நிபுணர்கள் தாதியர்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்கள் உத்தியோகத்தர்கள் உட்பட 400 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள் சுமார் 50 பேர் அளவில்விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்கள்.

எனினும் தற்போது பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் பயப்படத் தேவையில்லை தற்பொழுது அந்த குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு அது தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லை எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US