யாழில் துப்பாக்கிச் சூடு நடத்தி டிப்பர் வாகனத்தைக் கைப்பற்றிய பொலிஸார்
யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம், இன்று அதிகாலை 01 மணியளவில், வரணி - மந்துவில் வீதியில் இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பொலிஸாரின் முயற்சி
பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்த போது டிப்பர் வாகனத்தை நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி சாரதி வாகனத் செலுத்தியுள்ளார்.

இதையடுத்து கொடிகாமம் பகுதியில் வைத்தும் பொலிஸார் குறித்த டிப்பர் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.
எனினும் டிப்பர் வாகனம் அப்போதும் நிறுத்தப்படாமல் வரணியை நோக்கி தப்பிச் சென்ற நிலையில், துரத்திச் சென்ற பொலிஸார் டிப்பர் வாகனத்தின் ரயர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

எனினும், டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி உள்ளிட்ட இருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam