யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் திடீர் சோதனைக்கு உத்தரவு
புதிய இணைப்பு
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் பேருந்து நிலையத்தில் 24 மணித்தியாலமும் பொலிஸ் காவலரண் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
மேலும் முற்றவெளி மற்றும் கோட்டையை சூழவுள்ள பகுதிகளில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க, சிறந்த பொறிமுறை ஒன்றை திட்டமிட்டு துரித நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 826 திட்டங்களை செயல்படுத்த இந்த வருடம் 322 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆளுநர் கூறியுள்ளார்.
மிக நீண்ட காலத்தின் பின்னர் திறைசேரியிடமிருந்து கிடைத்த நிதியை உரியவாறு பயன்படுத்த வேண்டும் எனவும், அத்துடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று (28.08.2024) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
விசேட திட்டங்கள்
அத்துடன், குடிநீர் பிரச்சினை, வீதி சீரின்மை, காணி பிணக்குகள், போக்குவரத்து சிக்கல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான் முறைப்பாடுகள் தொடர்பில் வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்தும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ். மத்திய பேருந்து நிலையத்திலும், முற்றவெளி மற்றும் கோட்டையை சூழவுள்ள பகுதிகளிலும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த முறைப்பாடுகளுக்கு அமைய, யாழ். மத்திய பஸ் நிலையத்தில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதுடன் பேருந்து நிலையத்தில் 24 மணித்தியாலமும் பொலிஸ் காவலரண் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
மேலும், முற்றவெளி மற்றும் கோட்டையை சூழவுள்ள பகுதிகளில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க, சிறந்த பொறிமுறை ஒன்றை திட்டமிட்டு துரித நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 826 திட்டங்களை செயல்படுத்த இந்த வருடம் 322 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 734 திட்டங்கள் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், மிக நீண்ட காலத்தின் பின்னர் திறைசேரியிடமிருந்து கிடைத்த நிதியை உரியவாறு பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளதுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.