டிட்வாவை விட அதிக மழைவீழ்ச்சியை எதிர்நோக்கவுள்ள யாழ். மாவட்டம்
பொத்துவிலுக்கு தென் கிழக்காக சுமார் 580 கிலோமீட்டரில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் கிழக்கு மாகாணத்தின் கரையோரத்தை நெருங்க உள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று (07.01.2026) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த நான்காம் திகதி இந்தோனேசியாவுக்கு மேற்குப் பக்கமாக வங்களா விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காற்றுச் சுழற்சி உருவாகியது.
குறித்த காற்று சுழற்சியானது ஆறாம் திகதி கிழக்கு மாகாணத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதன் வேகம் குறைவடைந்து தற்போது நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.