கொழும்பு-யாழ்.சேவையில் ஈடுபட்ட பேருந்து தீயில் எரிந்தமை தொடர்பில் வெளியான தகவல் (Video)

Sri Lanka Police Colombo Jaffna Sri Lanka Social Media
By Theepan Jul 08, 2023 12:38 PM GMT
Report

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து தீ விபத்தில் முழுமையாக எரிந்தமை தொடர்பாக சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் விஷமத்தனமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக விபத்தில் எரிந்த காரை எக்ஸ்பிரஸ் பேருந்தின் உரிமையாளர் தி.துவாரகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் உண்மையை அறிந்து செயற்பட வேண்டும் என்பதுடன் தவறான போலி செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் எதிர்வரும் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (08.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தி.துவாரகேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


முழுமையாக எரிந்து நாசம்

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்து புத்தளம் – மதுரங்குளி செம்பட்டை பகுதியில் ஜுன் 30ம் திகதி அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் முழுமையாக எரிந்து நாசமாகியது.

எனினும், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிருக்கோ உடமைக்கோ சேதங்கள் ஏற்படவில்லை.

விபத்தின் போது பேருந்து சாரதியும் நடத்துனரும் துணிகரமாக செயற்பட்டு பேருந்தில் பயணித்தவர்களை காப்பாற்றினர்.

கொழும்பு-யாழ்.சேவையில் ஈடுபட்ட பேருந்து தீயில் எரிந்தமை தொடர்பில் வெளியான தகவல் (Video) | Jaffna Colombo Bus Fire Accident

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு சில ஊடகங்கள் பேருந்து திட்டமிட்டு எரிக்கப்பட்டதாக விஷமத்தனமான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

கொழும்பு-யாழ்.சேவையில் ஈடுபட்ட பேருந்து தீயில் எரிந்தமை தொடர்பில் வெளியான தகவல் (Video) | Jaffna Colombo Bus Fire Accident

ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. செய்தி தொடர்பாக தெளிவு வேண்டியவர்கள் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை தொடர்பு கொள்ளலாம்.

பயணித்த 43 பேரின் விபரங்களையும் தர நான் தயார். அவர்களிடமே நடந்தவற்றை கேட்டறிய முடியும்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் உண்மையை அறிந்து செயற்பட வேண்டும் என்பதுடன் தவறான போலி செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் எதிர்வரும் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US