அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் ஆங்கில மொழியை தடை செய்யும் பிரபல ஐரோப்பிய நாடு! மீறினால் கோடிகளில் அபராதம்
இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் (Giorgia Meloni) கட்சி, நாட்டில் உள்ள பொது மற்றும் தனியார் அமைப்புகள் வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கிலத்தை, அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை முன்மொழிந்துள்ளது.
பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி (Brothers of Italy) தேசியவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்த மசோதா, இத்தாலிய மொழியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் விதியை மீறுவது கண்டறியப்பட்டால் 100,000 யூரோக்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ. 3.6 கோடி) வரை அபராதம் விதிக்கப்படும்.

இத்தாலிய மொழி பாதுகாக்கப்பட வேண்டும்
இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் இது எப்போது நிகழும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இத்தாலிய மொழி பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் வளர்க்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் வரைவு மசோதா, ஆங்கிலம் இத்தாலியர்களை "அவமதிக்கிறது மற்றும் இழிவுபடுத்துகிறது" என்று கூறுகிறது,

வெளிநாட்டு வார்த்தைகளுக்கான அனுமதி
மேலும் அனைத்து பொது மற்றும் தனியார் அமைப்புகளும் நிறுவனங்களும் அவர்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்த "டான்டேவின் மொழியை" (இத்தாலி) பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.
பெயர்கள் மற்றும் சுருக்கெழுத்துக்கள் உட்பட அனைத்து வேலை தொடர்பான விண்ணப்பங்களும் இத்தாலிய மொழியில் உச்சரிக்கப்பட வேண்டும், அவற்றை மொழிபெயர்க்க இயலாது என்றால் மட்டுமே வெளிநாட்டு வார்த்தைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வரைவு குறிப்பிடுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதால், ஐரோப்பாவில் ஆங்கிலத்தின் பரவலான பயன்பாடு "இன்னும் எதிர்மறையானது மற்றும் முரண்பாடானது" என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 11 மணி நேரம் முன்
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam