நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி
நெடுந்தீவு(Neduntheevu)பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று(30) நெடுந்தீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சி
தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக தெரிவானார்.
உப தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட செபஸ்ரியன் விமலதாஸ் தெரிவானார்.
13 உறுப்பினர்களை கொண்ட நெடுந்தீவு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 6 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
இன்றைய தெரிவிற்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வலி.வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் ச.சுகிர்தன் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.














ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
