ஊடகவியலாளர் நிலாந்தனை களமிறக்கும் முயற்சியில் தமிழரசுக் கட்சி!
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபையை கைப்பற்றும் நோக்கில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாந்தனை பிரதான வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் இம்முறை தமிழரசுக் கட்சி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், செங்கலடி ஏறாவூர் பற்று, வாழைச்சேனை போன்ற பிரதேச சபைகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றுவதில் சவால்கள் உள்ளது.
பிரதான வேட்பாளர்
இதனைக் கருத்திற்கொண்டு ஏறாவூர் பற்று பிரதேச சபை கைப்பற்றும் நோக்கில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் தமிழ் தேசிய செயற்பாட்டாளருமான நிலாந்தனை பிரதான வேட்பாளராக களம் இறக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
செங்கலடி பிரதேசத்தில் வசிக்கும் ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தன் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதில் மிகத் தீவிரமாக செயற்பட்டவர்.
இவர் சிவில் சமூக செயற்பாட்டாளராவும் செயற்பட்டாளராகவும், இலஞ்ச ஊழலை ஒழிப்பதிலும் முன் நின்று செற்பட்டவர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக தனது குரலை ஊடகத்துறை ஊடக வெளிப்படுத்தி வரும் இவர் அரச புலனாய்வு துறை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் பல்வேறு விசாரணைகளுக்கு முகம் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு 11 மணி நேரம் முன்

இளவரசர் வில்லியமை பிரிந்த நேரத்தில் கேட் கூறிய அந்த வார்த்தைகள்: வியப்படைந்த வில்லியமின் தோழி News Lankasri
