உலக நாடுகளை வியக்கவைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள்
பிஎஸ்எல்வி ஆர்பிட்டல் எக்ஸ்ப்ரீமென்டல் மாட்யூல்-3 (PSLV Orbital Experimental Module-3) என்று அழைக்கப்படும் இஸ்ரோவின் ஸ்பேஸ் மிஷன் (Space Mission) ஆனது துளி அளவு கூட விண்வெளியில் எந்த பாகத்தையும் மிதக்கவிடாமல் வெற்றிகரமாக பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் விளைவாக இஸ்ரோவின் பிஓஇஎம்-3 மிஷன் ஆனது ஸீரோ டெப்ரிஸ் மிஷன் (Zero debris mission) ஆக பதிவாகியுள்ளதுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இதுவொரு முக்கியமான மைல்கல் என கூறப்படுகின்றது.
POEM-3 மிஷன்
இதற்கான காரணம், வழக்கமாக விண்வெளிக்குள் செல்லும் எந்தவொரு விண்கலமுமே, விண்வெளியில் ஏதேனும் சிறிய பாகத்தை மிதக்கவிட்டு விடுவது வழக்கம். அதுதான் ஸ்பேஸ் டெப்ரிஸ் (Space Debris) என்று அழைக்கப்படுகிறது.
எனினும் இஸ்ரோவின் பிஓஇஎம்-3 அப்படி இல்லை. பிஎஸ்எல்வி-சி58 (PSLV-C58) திட்டத்தின் ஒரு பகுதியான பிஓஇஎம்-3 மிஷன் கடந்த ஜனவரி 1 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதாகவும், இந்த மிஷன் நடைமுறையில் பூஜ்ஜிய சதவீத குப்பைகளை சுற்றுப்பாதையில் விடுவதாகவும் இஸ்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனைத்து செயற்கைக்கோள்களையும் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்த வேண்டும் என்கிற முதன்மை பணியை முடித்த பிறகு, பிஎஸ்எல்வி-யின் டெர்மினல் ஸ்டேஜ் ஆனது த்ரீ-ஆக்சிஸ் ஸ்டெபிலைஸ்டு பிளாட்பார்ம் ஆன பிஓஇஎம்-3 ஆக மாற்றப்பட்டு, சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டீ-ஆர்பிட் சோதனையானது விண்வெளியில், 650 கிலோமீட்டர் முதல் 350 கிலோமீட்டர் வரையிலான சுற்றுப்பாதையில் நடத்தப்பட்டுள்ளது.
இது ஆரம்பநிலை ரீ - என்ட்ரியை (Re - entry) எளிதாக்கியது, எஞ்சிய உந்துசக்திகளை (Residual propellants) குறைப்பதன் மூலம் தற்செயலான முறிவு அபாயங்களை குறைத்தாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பிஓஇஎம்-3 ஆனது 9 வெவ்வேறு சோதனை பேலோடுகளுடன் கட்டமைக்கப்பட்ட மிஷனாகும். அந்த 9 பேலோடுகளில் 6 பேலோடுகள் ஆனது அரசு சாரா நிறுவனங்களால் (NGEs) வழங்கப்பட்டன.
மேலும் இந்த பேலோடுகளின் பணி நோக்கங்கள் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்பட்டன என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. பிஓஇஎம்-3 மிஷனின் இந்த துல்லியமான வெற்றியானது மிகவும் குறைந்த செலவில், குறுகிய கால விண்வெளி சோதனைகளை மேற்கொள்வதற்கான முக்கிய தளத்தை திறந்துவிட்டுள்ளது.
நிசார் மிஷன் தாமதமாக காரணம்
இஸ்ரோ தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும் கூட்டு சேர்ந்து உருவாக்கும் நிசார் (NISAR) மிஷனின் ஏவுகணைக்கான தயார்நிலை திகதியானது ஏப்ரலின் இறுதிக்குள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள நிசார் மிஷன் ஆனது இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளின் 39-அடி விட்டம் (12 - மீட்டர்) ரேடார் ஆண்டெனா ரெஃப்ளெக்டர் மீது ஒரு ஸ்பெஷல் கோட்டிங் போடுவது, இந்த மிஷனின் இறுதிகட்ட பணிகளில் ஒன்றாகும்.
இந்த ஸ்பெஷல் கோட்டிங் செயற்கைகோள் ஆனது விண்வெளியில் பாய்ச்சப்படும் போது, அதை பாதிக்கக்கூடிய வெப்பநிலை அதிகரிப்புக்கு எதிராக ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காணப்படும்.
நாசா தான் இந்த ஸ்பெஷல் கோட்டிங்கிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் இதற்காக குறிப்பிட்ட ரெஃப்ளெக்டர் ஆனது கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஸ்பெஷல் பெசிலிட்டிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட இந்தியாவுக்கு திரும்பவுள்ளது. இதுவே நிசார் மிஷன் சற்றே தாமதமாக முக்கிய காரணமாகும் என குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |