லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பலர் பலி
லெபனான் (Lebanon) தலைநகர் பெரூட்டில் இஸ்ரேல் (Israel) நடாத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலானது நேற்று (23) மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்போது 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
வான்வழி தாக்குதல்
இந்தநிலையில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து.லெபனானுக்குள் புகுந்தும், வான்வழி மூலமாகவும் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதேவேளை, காசாவிலுள்ள மருத்துவமனைமீது கடந்த (22.11.2024) அன்று இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 துணை மருத்துவ பணியாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |