போர் நிறுத்தம் குறித்து பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள கோரிக்கை
காசா போரை நிறுத்த வேண்டுமாயின் ஹமாஸ் அமைப்பின் தலைவரை கண்டுபிடித்து கொல்ல காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
ஹமாஸ் காஸா தலைவர் யாஹ்யா சின்வாரை (Yahya Sinwar) தங்கள் இராணுவம் ஒழிக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதற்கு முன்னதாக காசா மக்கள் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தால், அவர்கள் அவரைக் கொல்ல வேண்டும், அப்போது தான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் சுரங்கப்பாதைகளுக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்கவும், படைவீரர்களைத் தாக்க நிர்ப்பந்திக்கவும் இஸ்ரேலிய இராணுவம் காலாட்படை மற்றும் டாங்கிகளைப் பயன்படுத்தியபோது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்காது
இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் ஒவ்வொரு பட்டாலியனையும் அழித்து வருவதாகவும், வடக்கு மற்றும் தெற்கிலிருந்து காசா நகரில் உள்ள பயங்கரவாத மையங்களை தாக்குவதாகவும் கேலண்ட் கூறியுள்ளார்.
இதேவேளை யுத்தம் முடிவடையும் போது காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்காது என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் காசாவில் இனி ஹமாஸ் இருக்காது,அச்சுறுத்தல்களுடன் தலை தூக்கும் எவருக்கும் எதிராக எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க இஸ்ரேலுக்கு முற்றிலும் சுதந்திரம் உள்ளது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.