இஸ்ரேலைச் சுழ்ந்துவரும் மிகப் பெரிய ஆபத்து!! அடிக்கத் தயாராகிவிட்ட இஸ்ரேல்!
தென் லெபனானில் நிலைகொண்டுள்ள ஹிஸ்புல்லாக்கள் உடன் ஒரு யுத்தத்திற்குச் செல்லுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை என்றுதான் கூறவேண்டி இருக்கின்றது.
ஹிஸ்புல்லா அமைப்பு மிகப் பெரிய படைக்கட்டுமானங்களுடன் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் இஸ்ரேல் மீதான போர்பிரகடனத்தைச் செய்தபடி நின்றுகொண்டிருக்கின்றது.
ஹிஸ்புல்லா என்ற அமைப்புக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்துவதை விட வேறு எந்த ஒரு குறிக்கோளும் இல்லை.
இஸ்ரேலை தாக்கும்படி கூறி அவர்களுக்கு ஆயுதங்கள் வருகின்றன. பணம் வருகின்றது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்துவதுதான் அவர்களது முழு நேர வேலை.
அப்படிப்பட்ட ஒரு சக்தியை தனது எல்லையில் வைத்துக்கொண்டு தொடர்ந்து அமைதிகாப்பது என்பது இஸ்ரேலைப் பொறுத்தவரை 'பாம்பை சட்டைப்பைக்குள் வைத்திருப்பதை' போன்றது.
இஸ்ரேல் லெபனான் எல்லைகளில் எழக்கூடிய யுத்த நிலவரங்கள் பற்றி ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
