இஸ்ரேலில் உக்கிரமடைந்துள்ள நிலைமை: அங்கிருக்கும் இலங்கையர்கள் குறித்து வெளியான புதிய தகவல்
இஸ்ரேலில் காணாமல்போன இருவரைத் தவிர வேறு எந்த இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்ட சம்பவம் இதுவரை பதிவாகவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (13.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், காஸா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மக்கள் இயல்பாக வாழ்ந்து வருவதாக அங்குள்ள இலங்கை தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தின் கோரிக்கை
போரில் பாதிக்கப்படும் இலங்கையர்களுக்கு உதவிகளை உடனடியாக வழங்கத் தேவையான நிதியை வழங்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி 10,000 அமெரிக்க டொலரை அவசர தேவைகளுக்காக வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக வணிக விமான சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
தூதரக அறிக்கைகளின் அடிப்படையில், விமான பயணக் கட்டணங்கள் கணிசமாக உயர்வடைந்துள்ளன சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |