இஸ்ரேலுக்கு ஹமாஸ் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
பிணைக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் உடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை கொலை செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் வீடியோ மற்றும் ஆடியோக்களை ஒளிபரப்புவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான சண்டை
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
❗️ A spokesman for Hamas terrorists Abu Obeida issued a statement promising that "any shelling of our people without warning will be met with the execution of a hostage, and we will broadcast this execution with video and audio." pic.twitter.com/bSlHvOTcFD
— NEXTA (@nexta_tv) October 9, 2023
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் இதுவரை காசாவில் 1100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலே பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அபு ஒபைடா இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.