காசாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்...! வெளியேறும் இலட்சக்கணக்கான மக்கள்
புதிய இணைப்பு
இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் எச்சரிக்கை காரணமாக காசாவின் வடக்கே உள்ள மக்கள் பெருமளவில் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பான OCHA வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் அதிகரித்துள்ளதுடன் வியாழக்கிழமை இரவு 11 மணியளவு நிலவரத்தின்படி 4,23,378 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 64 சதவீதம் பேர் ஐ.நா.வின் பலஸ்தீன அகதிகள் ஆதரவு அமைப்புகளின் பாதுகாப்பில் உள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால் உயிருக்கு அஞ்சி 1,53,000 பேர் காசாவுக்குள்ளேயே வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பலத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி உள்ள காஸா பகுதியில் உள்ள வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பில் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7 ஆம் திகதி நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காஸா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிந்துள்ளந்துள்ளதுடன் உயிரிழப்பு அதிகரித்து செல்கின்றது.
இந்நிலையில், காஸாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டவர்கள்
காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில் தாக்குதலைத் தவிர்க்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தத்தை பலஸ்தீன ஆயுதக் குழுக்களும், ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளும் அங்கீகரித்திருப்பதாக இதற்கான முயற்சியை மேற்கொண்ட கட்டார் தெரிவித்துள்ளது.
காஸாவில் இருந்து ரபா முனை வழியாக வெளிநாட்டவர்கள் எகிப்துக்குள் செல்வதற்கு எகிப்தும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிரடியாக அதிகரிப்பு! கொழும்பு விஜயம் செய்த அவர் விரைந்து திரும்ப இதுவே காரணம்





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
