இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலானது!
இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இன்றிரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் வகையில் இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று முதல், இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று அறிவித்திருந்தார்.
மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை இந்த ஊரடங்கு நடைமுறை அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் கோவிட் டெல்டா திரிபு காரணமாக நாளாந்தம் 150க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்ற நிலையிலேயே, அரசாங்கம் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை பிறப்பிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
