நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபட்டு நிகழ்வுகள் (Photos)

Kilinochchi Mannar Easter Economic
By Kanamirtha Apr 17, 2022 06:09 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. 

இஜேசு கிறிஸ்து உயிர்த்ததை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறை ஈஸ்டர் பெருவிழாவாகக் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சியில் உள்ள அனைத்து திருச்சபைகளிலும் விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றன.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் நீங்கி உயிர்த்த இயேசுபிரான் நாட்டை ஆசீர்வதிக்க வேண்டும் என வழிபாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

முறிகண்டி தென்னிந்தியத் திருச்சபையின் வழிபாடு இன்று காலை இடம்பெற்றது. திருப்பலியை பிதா ஜோன் தேவசகாயம் ஒப்புக் கொடுத்தார்.

செய்தி - யது

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபட்டு நிகழ்வுகள் (Photos) | Island Wide Sunday Special Worship Events

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபட்டு நிகழ்வுகள் (Photos) | Island Wide Sunday Special Worship Events

மன்னார்

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.

மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கல் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன் போது மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகக் கலந்து கொண்டனர். திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது ஆலயத்தைச் சூழ பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம் பெற்றது. இன்று காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி - ஆசிக் 

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபட்டு நிகழ்வுகள் (Photos) | Island Wide Sunday Special Worship Events

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபட்டு நிகழ்வுகள் (Photos) | Island Wide Sunday Special Worship Events

யாழ்ப்பாணம்

வரலாற்றுச்சிறப்பு மிக்க யாழ். மரியன்னை பேராலயத்திலும் இன்று காலை உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

இதனை யாழ்.மறைமாவட்ட ஆயரின் அருட்சகோதர் என் டீபன்ராஜ் நடாத்தி வைத்தார். தவக்காலத்தின் மறுமலர்ச்சியில் உயிர்த்த ஞாயிறு அன்று "யேசுப்பிரான் காட்டிய வாழ்வியல் பாடங்கள்" என்னும் தலைப்பிலான சிறப்புக் கூட்டுப்போதனையும் இடம்பெற்றது.

இதில் யாழ். மாவட்டத்திலிருந்து பல பாகங்களிலும் வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி - கஜி 

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபட்டு நிகழ்வுகள் (Photos) | Island Wide Sunday Special Worship Events

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபட்டு நிகழ்வுகள் (Photos) | Island Wide Sunday Special Worship Events

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நேற்றிரவு 12 மணிக்கு ஆலய விளக்குகள் அணைக்கப்பட்டு புது தீமுட்டி மெழுகுதிரி ஏற்றி உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.

மெழுகுதிரி செபிக்கப்பட்டு நீரினுள் அமிழ்த்தப்பட்டு புனித நீர் பக்தர்களுக்குத் தெளிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டார்கள். இதன்போது உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

இதன்போது 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியிலுள்ள மென்ரசா வீதியில் புதிதாக சீயொன் தேவாலயம் அமைக்கப்பட்டு அங்கு இன்று உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனையில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு ஆராதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சக்ரான் காசீம் தலைமையிலான தற்கொலைக் குண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், 93 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் தேவாலயம் பாதிப்படைந்து இன்று 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சாந்தி வேண்டி ஆராதனையில் ஈடுபட்டனர்.

சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு நடைபெற்ற இந்த வழிபாடுகளில் அடியார்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - குமார்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபட்டு நிகழ்வுகள் (Photos) | Island Wide Sunday Special Worship Events

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபட்டு நிகழ்வுகள் (Photos) | Island Wide Sunday Special Worship Events

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US